சாலையோரம் கொட்டப்பட்ட பாறை கற்களால் இடையூறு

குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பாறை கற்கள் மற்றும் மண் அதே இடத்தில் கொட்டப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.

குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதில், நந்தகோபால் பாலம் அருகே சாலை ஓரத்தில் பிரம்மாண்ட அளவில் மண் தோண்டப்பட்டு பாறை கற்கள் அகற்றப்பட்டு வருகிறது.

அவை, அதே இடத்தில் கொட்டப்பட்டுள்ளதால் வளைவான பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்த போதும், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்துகள் ஏற்படும் முன் இவற்றை அகற்ற வேண்டும்.

Advertisement