த.வெ.க. மாநாட்டில் பங்கேற்ற கோத்தகிரி இளைஞர் மரணம்

கோத்தகிரி: மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில் பங்கேற்ற, கோத்தகிரியை சேர்ந்த இளைஞர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.

த.வெ.க., இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் நடந்தது. மாநாட்டில் பங்கேற்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் சென்றனர். அதில், கோத்தகிரி கேம்ப்லைன் துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து, ரித்திக்ரோஷன்,18, மாநாட்டில் பங்கேற்றார்.

வெயிலின் தாக்கத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக, மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கோத்தகிரி நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். உயிரிழந்த ரோஷன் பிளஸ்-1 படித்துவிட்டு கொரியர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரின் உடலுக்கு இறுதி சடங்கு அன்னுாரில் நடந்தது.

Advertisement