திறப்பு விழா

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கர் செவலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு உடைய செயல்முறை கிடங்கினை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

கங்கர் செவலில் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கலைவாணி, தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் துணை மண்டல மேலாளர் ஆதிலட்சுமி, உதவி பொறியாளர் கிருத்திகா குத்து விளக்கேற்றினர்.

முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், தி.மு.க.. ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் கலந்து கொண்டனர்.

Advertisement