அறிவியல் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் அறிவில் கண்காட்சி நடந்தது.

உறவின்முறை தலைவர் குருவையா தலைமை வகித்தார். பள்ளி செயலர் சிங்கராஜ், தலைவர் சொக்குமுத்து அய்யனார் முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதனை சுற்று வட்டார பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மக்கள் பார்வையிட்டனர்.

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்கனி, இந்து ராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertisement