7 பதக்கம் வென்றது இந்தியா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...

சமோகோவ்: பல்கேரியாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 72 கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் காஜல், சீனாவின் யுகி லியுவை எதிர்கொண்டார். 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் ஆன காஜல், சிறப்பாக செயல்பட்டார். முடிவில் காஜல், 8-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
50 பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் ஷ்ருதி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியின் ஜோசப்பினை சந்தித்தார். இதில் 6-0 என வெற்றி பெற்ற, ஷ்ருதி வெண்கலம் கைப்பற்றினார்.
53 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சாரிகா, போலந்தின் வால்சக் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சாரிகா, 11-0 என வெற்றி பெற்று, பதக்கம் வசப்படுத்தினார்.
பெண்கள் 'பிரீஸ்டைல்' பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்ற இந்தியா, ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடம் பெற்றது. ஜப்பான் (5 தங்கம், 2 வெண்கலம்) சாம்பியன் ஆனது. சீனா (1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) 3வது இடம் பிடித்தது.
மேலும்
-
திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்
-
இந்திய பெண்கள் அணி முன்னிலை * ராகவி, ஷைபாலி அரைசதம்
-
விநாயகர் சதுர்த்தி விழா: 380 சிறப்பு ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு
-
டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையில்லை; இபிஎஸ் சந்தேகம்
-
தேர்வு முடிவுகளை விட உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
-
உலக ஐயப்பன் சங்கமத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: கேரள பாஜ கடும் எதிர்ப்பு!