இஸ்ரேலுக்கு எதிரான தடை விவகாரம்: நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ராஜினாமா

ஆம்ஸ்டர்டாம்: இஸ்ரேலுக்கு எதிராக புதிய தடைகளை கொண்டுவர முடியாததால், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறித்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரு புறம் போர் நிறுத்தப்பேச்சு நடந்து வருகிறது.

இந்நிலையில் காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் அமைச்சர்கள் மீது தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப், அந்நாட்டு பார்லிமென்டில் தெரிவித்திருந்தார். அவரது முடிவை நெதர்லாந்து அமைச்சரவை நிராகரித்துவிட்டது.

இதன்காரணமாக, நேற்று மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக திடீரென அறிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து
அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நெதர்லாந்து அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement