விநாயகர் சதுர்த்தி விழா: 380 சிறப்பு ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு

புதுடில்லி: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் 280 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 வரை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, 380 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளோம்.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு என கடந்த 2023 ல் 305 சிறப்பு ரயில்களும் 2024 ல் 358 சிறப்பு ரயில்களையும் இயக்கி இருந்தோம். அது தற்போது 380 ஆக உயர்த்தி உள்ளோம்.
மத்திய ரயில்வே சார்பில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிரா மற்றும் கொங்கன் வட்டாரத்தில் 296 ரயில்களும் மேற்கு ரயில்வே சார்பில் 56 ரயில்களும் தெற்கு ரயில்வே சார்பில் 22 ரயில்களும் கொங்கன் ரயில்வே சார்பில் 6 ரயில் சேவைகளும் இதில் அடங்கும்.
இதில் கொங்கன் வட்டாரப்பகுதி ரயில்கள் கொலாட், மங்கோன், சிப்லன், ரத்னகிரி, கனகவல்லி, சிந்துதர்க், கூடல், சவந்த்வாடி சாலை, மத்கோன், கர்வார், உடுப்பி மற்றும் சுரத்கல் வழியாக செல்லும்.
இவ்வாறு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே சாட்சியம் கவர்னர் உத்தரவுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
-
கேன்டீன் டீ குடித்த டாக்டர் 'சீரியஸ்'
-
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு பெண் பலி; கடைகள், வாகனங்கள் சேதம்
-
தெருநாய்க்கு உணவளிக்கும் இடம் டில்லி மாநகராட்சி மும்முரம்
-
காஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
-
இன்று இனிதாக ... (24.08.2025) புதுடில்லி