திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

புதுடில்லி: 'அடுத்தடுத்து ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர். இதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் தான் தீர்வு' என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களின் மாநாட்டில் அவர் பேசியதாவது; நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், பலகட்ட தேர்தல்களால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும், லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டியது அவசியமாகிறது. அடுத்தடுத்து ஓட்டு போடுவதால் வாக்காளர்கள் சோர்வடைகின்றனர். தேர்தலின் போது நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது நிர்வாகப் பணிகள் பெரும்பாலும் பாதிக்கப்படும்.
மேலும் மாவட்டம் முதல் மாநில அளவில் உள்ள அமைப்புகள் அகில இந்திய நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும். வர்த்தகத் துறையினர் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரித்தால், நாம் இந்தியாவின் ஒவ்வொரு இதயத்தையும் தொட முடியும், எனக் கூறினார்.



மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் இருந்தே சாட்சியம் கவர்னர் உத்தரவுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
-
கேன்டீன் டீ குடித்த டாக்டர் 'சீரியஸ்'
-
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு பெண் பலி; கடைகள், வாகனங்கள் சேதம்
-
தெருநாய்க்கு உணவளிக்கும் இடம் டில்லி மாநகராட்சி மும்முரம்
-
காஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
-
இன்று இனிதாக ... (24.08.2025) புதுடில்லி