காஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

ஹோஷியார்பூர்:பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் - பூர்-ஜலந்தர் சாலையில், காஸ் டேங்கர் லாரி தீப்பிடித்து இரண்டு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த, 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், 15 கடைகள் மற்றும் ஐந்து வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலாகின.
ஹோஷியார்பூர் - பூர்ஜலந்தர் சாலையில் நேற்று முன் தினம் இரவு, 10:00 மணிக்கு காஸ் டேங்கர் லாரியில் திடீரென தீப் பிடித்தது. மளமளவென பரவிய தீ, அருகிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளிலும் பரவியது.
இந்த விபத்தில், 15 கடைகள் மற்றும் ஐந்து வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த, 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதில் ஆறு பேர் நிலை கவலைகிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
நிவாரணம் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் பகவந்த் மான், இரு குடும்பத்துக்கும் தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.