கோவை மாணவர்கள் விடுதிகளில் சோதனை; ஏராளமான ஆயுதங்கள், கஞ்சா பறிமுதல்; போலீசார் அதிர்ச்சி

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்திய போலீசார், ஏராளமான ஆயுதங்கள், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.





அப்போது போலீசாரை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவை மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. ஏராளமான ஆயுதங்களும் மாணவர்களின் அறைகளில் சிக்கின.
கஞ்சா விற்பனைக்காக 'யுபிஐ' மூலம் பணம் வசூலித்ததும் விசாரணையில் அம்பலம் ஆனது.இது தொடர்பாக சில மாணவர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், கோவில்பாளையம், செட்டிபாளையம் மதுக்கரை ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மாவட்டம் முழுதும் 90 குழுவினர் அமைக்கப்பட்டு, 412 போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனைத்து விடுதிகளிலுமே கஞ்சா புழக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர்களுக்கு எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பது பற்றி போலீசார் தோண்டித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
@block_Y@
கல்லூரிகளில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீசார் அனைத்து தங்கும் விடுதிகளிலும் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும். மாணவர் விடுதிகள் மட்டுமின்றி மாணவியர் விடுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும். அரசு, தனியார் கல்லூரி விடுதிகள் மட்டுமின்றி, மாணவ மாணவியர் தங்கி இருக்கும் அனைத்து விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும். அனைத்து விடுதி வார்டன்களின் கூட்டத்தை போலீசார் நடத்தி, வார்டன்களுக்கு கடும் எச்சரிக்கை விட வேண்டும். மாணவ மாணவியர் தங்கி இருக்கும் ஒவ்வொரு அறையிலும் வார்டன்கள் நேரில் ஆய்வு செய்து போதைப் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உறுதிமொழி பத்திரத்தை விடுதி வார்டன்களும், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களும் கையெழுத்திட்டு போலீசாரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒப்படைக்க வேண்டும்.block_Y










மேலும்
-
இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை அறிக்கை
-
முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி!
-
20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: திரும்பப் பெற வெண்டும் என்கிறார் சீமான்
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: விரைவில் இந்தியா வருகை
-
அரசியல் ஆதாயத்துக்காக அவையை செயல்பட விடாத எதிர்க்கட்சிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு
-
சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி