கார் கவிழ்ந்து இருவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: கார் கவிழ்ந்து, ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு உட்பட இருவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பூஞ்சோலை நகரை சேர்ந்தவர் தேவராஜ், 58. இவரும், உறவினரான ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தட்சிணாமூர்த்தி, 70, என்பவரும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுவிட்டு, நேற்று காலை காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை தட்சிணாமூர்த்தி ஓட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே களக்குடி விலக்கு, திருச்சி -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரத்தில் இருந்த பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், காயமடைந்த இருவரும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement