விண்வெளி சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு; தாய் நெகிழ்ச்சி

லக்னோ: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கி, ஆராய்சி செய்துவிட்டு பூமிக்குத் திரும்பினார்.
இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் சில தினங்களுக்கு முன், இந்தியா திரும்பினார். ஆகஸ்ட் 23ம் தேதி டில்லியில் நடைபெறும் விண்வெளி தின விழாவில் கலந்து கொண்டார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 25) சாதனை படைத்த பிறகு முதல்முறையாக பிறந்த மண்ணான லக்னோவுக்கு சுபான்ஷூ சுக்லா வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தாய் நெகிழ்ச்சி
மகன் வருகை குறித்து, சுபான்ஷூ சுக்லா தாய் ஆஷா சுக்லா கூறியதாவது:
என் மகன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளான். இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு அவனைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தேன். நாங்கள் அவனை அன்புடன் வரவேற்றேன், என்றார்.
மிகப்பெரிய சாதனை
சுபான்ஷு சுக்லாவின் சகோதரி கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்த நாளுக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இது மிகப்பெரிய சாதனை.
அனைத்து குழந்தைகளும், முழு லக்னோவும் அவரை (சுபான்ஷூ சுக்லா) வரவேற்றனர். இதை விட மகிழ்ச்சியாக எதுவும் இருக்க முடியாது. மக்கள் அவருக்கு மிகுந்த அன்பைக் காட்டுகிறார்கள். மேலும் அவர் குழந்தைகளை ஊக்குவிக்கிறார்'' என்றார்.
உத்வேகம்
உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், "லக்னோ மற்றும் இந்தியாவின் மகனான சுபான்ஷு சுக்லாவின் வருகைக்காக முழு லக்னோவும் காத்திருந்தது.
அவரது சாதனைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.
சுபன்ஷு சுக்லா உலகிற்கு ஒரு வழியைக் காட்டியுள்ளார். இன்று அவரை கவுரவிக்க உ.பி. அரசு ஒரு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அவர் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
-
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு
-
ஜக்தீப் தன்கர் விவகாரத்தில் மர்மத்தை கூட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா; காங்கிரஸ் விமர்சனம்
-
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே அத்துமீறும் சம்பவம்; நயினார் நாகேந்திரன் காட்டம்
-
ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: புதுச்சேரியில் பயங்கரம்
-
நுாதனமாக நகை, பணம் 'அபேஸ்': சிதம்பரம் வாலிபர் கைது