கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்

கள்ளக்குறிச்சி: கோடநாட்டில் தெருவில் நின்ற போது, ஜெயலலிதா என்று பெயரை சொல்லி இருப்பீர்களா? என்று தவெக தலைவர் நடிகர் விஜயை, பாஜவைச் சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் தவெக மாநாட்டில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய், பாஜ குறித்தும், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரையும் விமர்சித்து இருந்தார். அவரின் பேச்சுக்கு பாஜவினரும், திமுகவினரும் கடும் எதிர்வினையாக்கி வருகின்றனர்.
இந் நிலையில் கள்ளக்குறிச்சியில் தமது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெயர் சொல்லி அழைத்திருப்பீர்களா என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.
விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது;
ஊழலற்ற அரசாங்கம், வெளிப்படைத்தன்மையான ஆட்சியை நடத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட ஒருவரை அண்மையில் கத்துக்குட்டியான ஒருவர்(நடிகர் விஜயை குறிப்பிடுகிறார்) மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார்.
அப்படி அழைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீங்கள் (நடிகர் விஜய்) கோடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டு இருக்கும் போது மிஸ். ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லியிருப்பீர்களா? என்ன தவறு என்று கேட்கிறீர்கள்?
இன்றைக்கு மிஸ். ஜெயலலிதா ஜெயராம் என்று சுட்டிக்காட்டி சொல்லி பாருங்கள்.. சொல்லி பாருங்களேன். சிங்கம் வேட்டைக்கு மட்டும் போகுமா? அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுமா? சிங்கம்னா சிங்கமாக இருக்கணும். தூங்குகின்ற சிங்கமா இருக்கக்கூடாது.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், தன்மையற்று பேசியதால் நான் பேசுகிறேன். இல்லைனா நான் அவரை (நடிகர் விஜய்) பற்றி பேசலை. நமது முதல்வரை தாய்மாமா என்று கூப்பிடுவேன், அங்கிள் என்று சொல்வேன் என்று சொல்கிறார்.
நீங்க என்னை அங்கிள்னு, தாத்தான்னு கூப்பிடுங்க கவலைப்படலை. ஆனால் தரம் என்று ஒன்று இருக்கிறது. பிரதமரை அவரது பெயரை சொல்லி அழைக்கக்கூடாது. முதல்வரையும் பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது. ஏன் என்றால் அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்.
நீங்கள் அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். அந்த தரத்தை கற்றுக் கொள்ளுங்கள் விஜய் அவர்களே. நல்ல கருத்தை சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். தைரியம் என்றால் என்னிடம் வந்து பேசி பாருங்கள்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.












மேலும்
-
கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
-
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு
-
ஜக்தீப் தன்கர் விவகாரத்தில் மர்மத்தை கூட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா; காங்கிரஸ் விமர்சனம்
-
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே அத்துமீறும் சம்பவம்; நயினார் நாகேந்திரன் காட்டம்
-
ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: புதுச்சேரியில் பயங்கரம்
-
நுாதனமாக நகை, பணம் 'அபேஸ்': சிதம்பரம் வாலிபர் கைது