வார தொடக்கத்தில் சற்று குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.74,440!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த வெள்ளி கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 215 ரூபாய்க்கும், பவுன், 73,720 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) , தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 9315 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பவுனக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 74,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305க்கு விற்பனை ஆகிறது.

மேலும்
-
கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
-
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு
-
ஜக்தீப் தன்கர் விவகாரத்தில் மர்மத்தை கூட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷா; காங்கிரஸ் விமர்சனம்
-
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே அத்துமீறும் சம்பவம்; நயினார் நாகேந்திரன் காட்டம்
-
ஆட்டோ டிரைவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: புதுச்சேரியில் பயங்கரம்
-
நுாதனமாக நகை, பணம் 'அபேஸ்': சிதம்பரம் வாலிபர் கைது