கலை திருவிழாவில் பயிற்சி விநாயகர் சிலை வடிக்க முயற்சி

பள்ளிப்பட்டு: பெற்ற பயிற்சியின் தொடர்ச்சியாக, தற்போது விநாயகர் சிலை தயாரிக்கும் முயற்சியில் மாணவர் ஈடுபட்டு வருகிறார்.

அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

களிமண் சிற்பம், மணல் சிற்பம் செய்வது உள்ளிட்ட போட்டிகளும் இதில் இடம்பெறுகின்றன.

நடப்பாண்டு பள்ளிகள் அளவிலான நடந்த கலை திருவிழா, கடந்த வாரம் முடிந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், அடுத்த கட்டமாக வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளனர்.

இந்நிலையில், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவர் எம்.ஏ.அய்யப்பன் என்பவர், கலை திருவிழாவில் பெற்ற பயிற்சியின் தொடர்ச்சியாக, தற்போது விநாயகர் சதுர்த்திக்கு, பஞ்சமுக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக, அவரது வீட்டின் மாடியில் களிமண் சேகரித்து, சில நாட்களாக ஓய்வு நேரத்தில் சிலையை உருவாக்கி வருகிறார். மாணவரின் இந்த முயற்சி, கிராமத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement