தொடர் மழையால் வைக்கோல் கட்டுகள் நாசம்

ஆர்.கே.பேட்டை:தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வயல்வெளியில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கட்டுகள் வீணாகின.
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, ஒரே நாள் இரவில், 12 செ.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் 8 செ.மீ., மழை பதிவாகின. இதன் காரணமாக வயல்வெளியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
அறுவடை செய்த நெல்வயல்களில் இருந்த வைக்கோல் கட்டுகள், திடீர் மழையால் நனைந்து வீணாகியுள்ளன. கடந்த கோடை காலத்தில், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படும் வைக்கோல், பஞ்சம் ஏற்பட்ட போது, ஒரு கட்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, அறுவடை முடிந்துள்ள நெல் வயல்களில், வைக்கோல் கட்டுகள் தண்ணீரில் நனைந்து வீணாகியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்னிந்தியாவை நோக்கி நகரும் காற்று மாசுபாடு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
-
வார தொடக்கத்தில் சற்று குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.74,440!
-
8 ஆண்டுகள் கழித்து டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு
-
விண்வெளி சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு; தாய் நெகிழ்ச்சி
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி
-
கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்
Advertisement
Advertisement