திருப்போரூர் -- காட்டூர் சாலையில் மின்விளக்கு இல்லாமல் தவிப்பு

திருப்போரூர்:திருப்போரூர்- - காட்டூர் சாலையில் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
திருப்போரூர் - காட்டூர் சாலையைச் சுற்றி, பல கிராமங்கள் உள்ளன. இச்சாலை வழியாக அம்மாபேட்டை மருத்துவமனை, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், தேவைகளுக்கும் மக்கள் செல்கின்றனர். தண்ணீர் லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்களும் இச்சாலையில் செல்கின்றன.
இந்த சாலையில் கண்ணகப்பட்டில் டாஸ்மாக் கடை இருப்பதால், சுற்றுவட்டரா கிராமத்தினர் இங்கு வருகின்றனர்.
இச்சாலையில் மின் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அவ்வப்போது சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படும் போது, பின்தொடர்ந்து வரும் வாகனம் மோதும் நிலை ஏற்படுகிறது.
எனவே, இச்சாலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தென்னிந்தியாவை நோக்கி நகரும் காற்று மாசுபாடு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
-
வார தொடக்கத்தில் சற்று குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.74,440!
-
8 ஆண்டுகள் கழித்து டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு
-
விண்வெளி சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு; தாய் நெகிழ்ச்சி
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி
-
கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்