செங்கல்பட்டில் இசை தியான நிகழ்ச்சி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சத்தியம் பிரமிட் ஸ்பிரிச்சுவல் பவுண்டேஷன் சார்பில், தியான செங்கல்பட்டு வெற்றி விழா கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் இசை தியானம் நடந்தது.

பிரம்மர்ஷி பத்ரிஜியின் ஆசியுடன் நடந்த நிகழ்ச்சி நேற்று காலை 8:45 மணிக்கு துவங்கி 3 மணி நேர நேரடி இசை தியானம் நடந்தது.

இதையடுத்து, ஆன்மிக ஞான அமர்வுகள் மற்றும் தியான அனுபவ பகிர்வுகள் நடத்தப்பட்டன. மாலையில் பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சுற்று வட்டார மக்கள் பங்கேற்றனர்.

Advertisement