லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு; 3 பேர் கவலைக்கிடம்; சதிச்செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது

லண்டன்: லண்டனில் இந்திய உணகத்திற்கு தீ வைக்கப்பட்ட நிலையில், 5 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கிழக்கு லண்டனில் இந்திய உணவகம் (இண்டியன் அரோமா) செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் சொல்ல வேண்டும். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



மேலும்
-
ஒரு லாரிக்கு உரிமை கோரிய இருவர் திண்டிவனம் போலீசில் பரபரப்பு
-
பாலியல் புகார் எதிரொலி; பாலக்காடு காங் எம்எல்ஏ ராகுல் சஸ்பெண்ட்
-
டில்லிக்கு மஞ்சள் அலர்ட்: விமான நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
நீர்வளத்தை குன்ற செய்யும் அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
காதலர்களுக்காக திறந்திருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்கள்: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
-
உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா; வேறு காரணமில்லை என்கிறார் அமித்ஷா