கைலாயமே மிகப்பெரிய ஆன்மிக நுாலகம்: சத்குரு

தொண்டாமுத்துார்: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு, சமீபத்தில், இரண்டு சவாலான மூளை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன்பின், சத்குரு முதன்முறையாக, 17 நாட்கள் பைக் பயணம் மூலம், கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டார். யாத்திரைக்கு இடையே, நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் சக்கரவர்த்தி, பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோருடன், சத்குரு ஆன்லைன் மூலம் கலந்துரையாடினார்.
நடிகர் மாதவனுடன், சத்குரு பேசுகையில் ''கைலாயம் என்பதை வார்த்தைகள் மூலம் யாராலும் விளக்கவோ, விவரிக்கவோ முடியாது. ஆதியோகி சிவனே முழுமையாக இருக்கக்கூடிய இடம். இந்த பூமியிலேயே அல்லது இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மிக நுாலகம் என்று கூற முடியும். சிவனின் ஜடாமுடி என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு இலையிலும் ஞானம் சேமிக்கப்பட்டு இருக்கிறது. அது வேறு விதமான ஒரு ஞான நிலை. இந்த பிரபஞ்சம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் இங்கு இருக்கிறது,'' என்றார்.
மேலும்
-
இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக மாற்ற நடவடிக்கை; பிரதமர் மோடி
-
பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும்; அழைக்கிறது ஐரோப்பிய யூனியன்
-
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 மாதங்களில் இல்லாத உச்சம்
-
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் தமிழகம் முதலிடம் என முதல்வர் பெருமிதம்: தொழில்துறையில் நாட்டின் வேலைவாய்ப்பு 5.92% உயர்வு
-
சென்னையில் தரவு மையம் 'டெக்னோ' நிறுவனம் துவக்கம்
-
ஓய்வூதிய திட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு உயர்நிலைக்குழு அமைப்பு