ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,040 உயர்வு


சென்னை: சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்துள்ளது. காலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்துள்ள நிலையில், மதியம் மீண்டும் ரூ.520 உயர்ந்தது. இதனால், கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,840 உயர்ந்துள்ளது.


சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்து கொண்டே வருகின்றன. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,240க்கு விற்பனையாகிறது.


இந்த நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. இதனால், ஒரு பவுன் தங்கம் ரூ.75,760ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ,65 அதிகரித்து ரூ.9,470க்கு விற்பனையாகி வருகிறது.

மதியத்துக்கு மேல் பவுனுக்கு மீண்டும் ரூ.520 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.76, 280 ஆக விற்பனை ஆகிறது.


கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, சுபமுகூர்த்த தினங்களினால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4 நாட்களில் மட்டும் ரூ.1,840 உயர்ந்துள்ளது.

கடந்த 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம் (பவுனுக்கு)

29-08-2025- ரூ.75,760

28-08-2025- ரூ.75,240

27-08-2025- ரூ.75,120

26-08-2025- ரூ.74,840

25-08-2025- ரூ. 74,440

Advertisement