ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்; 3 பேர் பலி

3


காபூல்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஆப்கனின் தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது; நங்கேர்ஹர் மற்றும் ஹோஸ்ட் மாகாணாங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், பொதுமக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசோ, அல்லது ராணுவமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தங்கள் நாட்டில் அவ்வப்போது தாக்குதல் நடத்தும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Advertisement