நமது தேசம் தொடர்ந்து முன்னேற வேண்டும்: துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை: "நமது தேசம் முன்னேற வேண்டும். இதற்கு விநாயகர் அருள் புரிய வேண்டும்" என துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அடுத்த மாதம் 9ல் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சி.பி. ராதாகிருஷ்ணன் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நமது நாட்டில், ஆன்மீகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. நமது நாட்டில் ஆன்மீகம் ஊக்குவிக்கப்படுகிறது. மும்பை மற்றும் மஹாராஷ்டிராவில், விநாயகர் சதுர்த்தியை நாங்கள் பிரமாண்டமாக கொண்டாடுகிறோம்.


அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது தேசம் முன்னேற வேண்டும். இதற்கு விநாயகர் அருள் புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement