துலீப் டிராபி: நபி 'ஹாட்ரிக்'

பெங்களூரு: துலீப் டிராபி காலிறுதியில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த வடக்கு மண்டல அணியின் அகிப் நபி, கபில்தேவ் சாதனையை சமன் செய்தார்.
பெங்களூருவில், துலீப் டிராபி கிரிக்கெட் நடக்கிறது. இதன் காலிறுதியில் வடக்கு, கிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 405 ரன் குவித்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய கிழக்கு மண்டல அணி, 230 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
நபி அசத்தல்: ஆட்டத்தின் 53வது ஓவரை வீசிய வடக்கு மண்டல அணியின் அகிப் நபி, 4வது பந்தில் விராத் சிங்கை (69) போல்டாக்கினார். அடுத்த இரு பந்தில் மானிஷி (0), முக்தர் உசேனை (0) வெளியேற்றினார். பின், 55வது ஓவரின் முதல் பந்தில் சூரஜ் சிந்து ஜெய்ஸ்வாலை (10) அவுட்டாக்கி, வரிசையாக 4 விக்கெட் சாய்த்தார். தொடர்ந்து அசத்திய இவர், 57வது ஓவரில் முகமது ஷமியை (1) வெளியேற்றினார்.
கபில்தேவ் வழியில்: 'வேகத்தில்' மிரட்டிய நபி, 'ஹாட்ரிக்' உட்பட 5 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் துலீப் டிராபி வரலாற்றில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய 3வது பவுலரானார். ஏற்கனவே கபில்தேவ் (வடக்கு, 1978-79, எதிர்: மேற்கு), சாய்ராஜ் பஹுதுலே (மேற்கு, 2001, எதிர்: கிழக்கு) 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்திருந்தனர். தவிர, முதல் தர போட்டியில் நான்கு பந்தில், 4 விக்கெட் சாய்த்த 4வது இந்திய பவுலரானார் நபி.
டேனிஷ் இரட்டை சதம்
மற்றொரு காலிறுதியில் மத்திய, வடகிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. டேனிஷ் மலேவர் (203), கேப்டன் ரஜத் படிதர் (125) கைகொடுக்க முதல் இன்னிங்சில் மத்திய மண்டல அணி 532/4 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. ஆட்டநேர முடிவில் வடகிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 168/7 ரன் எடுத்திருந்தது.
மேலும்
-
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
-
கழிவு நீரால் மக்கள் அவதி
-
'நிதி பற்றாக்குறை இலக்கில் 30% எட்டப்பட்டது'
-
ரூ.8,700 கோடி 'க்ரோ' ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி
-
இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை நம்பியில்லை: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு கருத்து
-
'ஓமன் நாட்டுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்'