தமிழ் தலைவாஸ் 'திரில்' வெற்றி

விசாகப்பட்டனம்: விசாகப்பட்டனத்தில் புரோ கபடி லீக் 12வது சீசன் நேற்று துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, தமிழ் தலைவாஸ், பாட்னா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் சுற்றில் மோதுகின்றன.
நேற்று நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 14-13 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்டாக, 14-19 என பின் தங்கியது. அடுத்து எழுச்சி பெற்ற தமிழ் தலைவாஸ் அணியினர் அடுத்தடுத்து புள்ளி எடுத்தனர்.
போட்டி முடிய 3 நிமிடம் இருந்த போது, தெலுங்கு டைட்டன்சை ஆல் அவுட்டாக்கி பதிலடி தர, தமிழ் தலைவாஸ் 31-29 என முன்னிலை பெற்றது. முடிவில் 38-35 என 'திரில்' வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் சார்பில் அர்ஜுன் தேஸ்வல் அதிகபட்சம் 12, கேப்டன் பவன் ஷெராவத் 9 புள்ளி எடுத்தனர்.
மேலும்
-
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
-
கழிவு நீரால் மக்கள் அவதி
-
'நிதி பற்றாக்குறை இலக்கில் 30% எட்டப்பட்டது'
-
ரூ.8,700 கோடி 'க்ரோ' ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி
-
இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை நம்பியில்லை: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு கருத்து
-
'ஓமன் நாட்டுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்'