பிராட்மேன் தொப்பி ரூ. 2.53 கோடி

கான்பெரா: பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ரூ. 2.53 கோடிக்கு ஏலம் போனது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன். டெஸ்டில் இவரது ரன் சராசரி 99.94 ஆக இருந்தது. கடந்த 1946-47ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்தது. பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றது.
அப்போது அணிந்திருந்த பச்சை நிற தொப்பி, நேற்று ஏலம் விடப்பட்டது. இதை அரசின் உதவியுடன், கான்பெரா தேசிய அருங்காட்சியகம், ரூ. 2.53 கோடி கொடுத்து வாங்கியது. பிராட்மேனின் 11 தொப்பியில், 9 தனியாரிடம் உள்ளன. 2 ஆஸ்திரேலிய அரசின் வசமானது.
ஆஸ்திரேலிய கலைத்துறை அமைச்சர் டோனி பர்கே கூறுகையில்,'' பிராட்மேன் அணிந்திருந்த பச்சை நிற தொப்பியை, பார்வையாளர்கள் தேசிய அருங்காட்சியகத்தில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
-
கழிவு நீரால் மக்கள் அவதி
-
'நிதி பற்றாக்குறை இலக்கில் 30% எட்டப்பட்டது'
-
ரூ.8,700 கோடி 'க்ரோ' ஐ.பி.ஓ., ஒப்புதல் அளித்தது செபி
-
இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை நம்பியில்லை: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு கருத்து
-
'ஓமன் நாட்டுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்'