கமிஷனர் உத்தரவால் விதிமீறி அமைத்த மேற்கூரை அகற்றம்

ஆத்துார், ஆத்துாரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் நகராட்சி மூலம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒப்பந்தம் எடுத்த கடைகளை, ஒரே கடையாக கட்டுமானப்பணி மேற்கொண்டார்.
அதில் மற்றொரு ஒப்பந்ததாரர் லோகநாதன் கடையும் சேர்த்து மேற்கூரை அமைத்துள்ளார்.
இதுகுறித்து லோகநாதன் புகார்படி, நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபாகமால் விசாரித்து, மேற்கூரையை அகற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று, ராஜேந்திரன் தரப்பில் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Advertisement