ராமர் பாலம் வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரியது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க உத்தரவிடக்கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கடலுக்கடியில் அமைந்துள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக விரைந்து அறிவிக்ககோரி பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை மனு அளிக்கும்படி உத்தரவிட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும்படியும் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மீண்டும் வழக்கு தொடுத்தார்.
அதில், ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின்படி, மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படியும் கோரப் பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -

மேலும்
-
நான்கரை மாதத்தில் பிறந்த 580 கிராம் குழந்தை; அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு; வங்கதேச தாய் ஆனந்த கண்ணீர்
-
'முறைகேடு நடக்கவில்லை'
-
மக்களிடம் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்திய புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் அமைச்சர் ரகுபதி பெருமிதம்
-
தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை துாக்கம் இல்லை: பழனிசாமி சூளுரை
-
காலவரையற்ற உண்ணாவிரதம்
-
'வாசிப்பு தானாக வசப்பட்டு விடாது முயற்சி எடுக்கவேண்டும்' கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேச்சு