வானிலை முன் அறிவிப்பு புறக்கணிப்பா: வைஷ்ணோ கோவில் நிர்வாகம் மறுப்பு

ஜம்மு : 'ஜம்மு - காஷ்மீரின் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு யாத்திரை சென்ற 34 பக்தர்கள் பலியான சம்பவத்துக்கு வானிலை முன் அறிவிப்பை புறக்கணித்ததே காரணம்' என பரவிய தகவலை, கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை சென்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த 26ல் கத்ரா பகுதியில் உள்ள திரிகுடா மலையின் அதுகுவாரி மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி, 34 பக்தர்கள் பலியாகினர்; 18 பேர் காயம் அடைந்தனர்.
'வானிலை முன்னறிவிப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பை புறக்கணித்து யாத்திரையை தொடர வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் அனுமதித்ததே பக்தர்கள் பலியாக காரணம்' என, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதை மறுத்து கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 26ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பக்தர்கள் பலியானது துரதிருஷ்டவசமானது. இறந்தவர்களுக்கு வாரியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. எனினும், வானிலை முன்னறிவிப்பை கோவில் நிர்வாகம் புறக்கணித்து யாத்திரையை தொடர்ந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது.
சம்பவம் நடந்த அன்று காலை 10:00 மணி வரை வானிலை சீராக இருந்தது. இதனால் யாத்திரையும் சீராக நடந்தது. ஹெலிகாப்டர் சேவை கூட தடையின்றி தொடர்ந்தது. மிதமான மழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பு கிடைத்ததும், பக்தர்களுக்கான முன்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தரிசனத்தை முடித்த பக்தர்கள் பாதுகாப்பாக கத்ராவுக்கு திரும்பினர். நிலச்சரிவில் காயம்
அடைந்த 18 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கக்ரியாலில் உள்ள கோவிலின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நான்கரை மாதத்தில் பிறந்த 580 கிராம் குழந்தை; அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு; வங்கதேச தாய் ஆனந்த கண்ணீர்
-
'முறைகேடு நடக்கவில்லை'
-
மக்களிடம் வரி வசூலிக்காமல் ஆட்சி நடத்திய புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் அமைச்சர் ரகுபதி பெருமிதம்
-
தி.மு.க., ஆட்சியை வீழ்த்தும் வரை துாக்கம் இல்லை: பழனிசாமி சூளுரை
-
காலவரையற்ற உண்ணாவிரதம்
-
'வாசிப்பு தானாக வசப்பட்டு விடாது முயற்சி எடுக்கவேண்டும்' கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேச்சு