விளையாட்டு தின விழா கொண்டாட்டம்



சேலம், இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.


அதன்படி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் பலர், தயான் சந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.இதை ஒட்டி, வரும், 3 காலை, 6:30 மணிக்கு சைக்கிள் பேரணி நடக்க உள்ளது.

Advertisement