மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா


ஆத்துார், ஆத்துார், தென்னங்குடிபாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 24ல் தொடங்கியது. நேற்று காலை, 2ம் கால யாக பூஜை நடந்தது. புண்ய நதிகளில் இருந்து கொண்டு

வரப்பட்ட புனித நீருக்கு பூஜை, கோ பூஜை செய்து திரவிய ஹோமம் நடந்த நிலையில் புனித நீருக்கு மகா தீபாராதனை நடந்தது.

கோபுர கலசங்களை, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோபுர கலசம் வைத்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மூலவர் அம்மனுக்கு, பால், தீர்த்த கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் பைத்துார் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement