முத்து விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா

அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோடு, முத்தம்மாள் நகரில் கட்டப்பட்டுள்ள முத்து விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு மங்கள இசையுடன், திருப்பள்ளி எழுச்சி, பூர்வாங்க பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை ஆகியன நடந்தன. காலை, 6:00 மணிக்கு மேல் அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி முன்னிலையில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின் அபிேஷகம், தீபாராதனை, தசதரிசனம் நடந்தது. விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement