கலெக்டர் அலுவலகத்தில் நாய்கள் 'உலா'வால் அச்சம்
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகம், தரைத்தளம் மற்றும் நான்கு அடுக்கு கட்டடத்தில் இயங்குகிறது. 3, 4ம் தளத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மதிய உணவின்போது மீதமாகும் உணவுகளை, அங்குள்ள படிக்கட்டு, தடுப்புச்சுவரின் மீது கொட்டி வைக்கின்றனர். அதை உட்கொள்ள வரும் நாய்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குரங்குகள், குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து உணவருந்திய பின் திரும்பி சென்றுவிடுகின்றன. நாய்கள், அதே பகுதியில் உலா வந்தபடி, உணவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அங்கேயே ஓய்வெடுப்பதும், உறங்கியும் விடுவதால், நாய்களின் வசிப்பிடமாகவே கலெக்டர் அலுவலகம் மாறி வருகிறது.
அதனால் ஊழியர்களும், மக்களும் அச்சத்துடன் நடமாட வேண்டி உள்ளது. விரட்ட முற்படும் போது, நாய்கள் குரைத்து கடிக்க பாய்வதால், பீதியுடன் திரும்பி விடுகின்றனர். தற்போது, 2ம் தளத்திலும் நாய்கள் உலா வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட எரிவாயு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்க வந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் திரியும் நாய்களை மொபைலில் வீடியோ எடுத்தது, தற்போது பரவி வருகிறது.
மேலும்
-
ராமர் பாலம் வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
இட ஒதுக்கீடு பிரச்னை: ஜராங்கே போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை
-
வானிலை முன் அறிவிப்பு புறக்கணிப்பா: வைஷ்ணோ கோவில் நிர்வாகம் மறுப்பு
-
சென்னையை அடுத்து கோவை, மதுரையில் மின்சார பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை
-
வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்
-
வங்க மொழி மக்களை எதிர்க்க வேண்டாம்; பா-.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல்