பணிபுரியாத கமிஷனர் எதற்கு? தி.மு.க., கவுன்சிலர் கேள்வி
ஆத்துார், ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார்.
அதில் நடந்த விவாதம் வருமாறு:
தி.மு.க., கவுன்சிலர் சங்கர்: 3 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. சுகாதார மைய கட்டட பணி முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்சி முடிய உள்ள நிலையில், சட்டசபை தேர்தலுக்கு எப்படி மக்களிடம் ஓட்டு கேட்டு செல்ல முடியும்.
பணி செய்யாத நகராட்சி அலுவலர்கள், இடமாறுதலில் சென்றுவிடுங்கள். எந்த பணியும் செய்யாத நகராட்சி கமிஷனர் எதற்காக உள்ளார்? டெண்டர் பணிகளை செய்யாத ஒப்பந்த
தாரரை மாற்ற வேண்டும்.
மேலாளர் சீனிவாசன்: கிடப்பில் உள்ள பணிகளை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். தாமதமாக பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு 'நோட்டீஸ்'
வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தி.மு.க., கவுன்சிலர்கள் சந்திரா, சாந்தி ஆகியோர், 'நாய்களை பிடிக்கும்படி பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை' என்றனர்.
சீனிவாசன்: ஆத்துாரில், 130 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் பிடிக்கப்படும்.
தி.மு.க., கவுன்சிலர் பிரபு: என் வார்டில் சாலைப்பணி தவிர்த்து, வேறு எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. குடிநீரில் சாக்கடை கலப்பதாக கூறியும் கண்டுகொள்ளவில்லை. வார்டு பிரச்னைக்கு தீர்வு காணாததால் வெளிநடப்பு செய்கிறேன்.
தொடர்ந்து அவர் வெளியேறினார்.
தி.மு.க., கவுன்சிலர் ஜீவா: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் வளைவு மேற்கு பகுதியில், கடை அமைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால், நீதிமன்றத்தில் கவுன்சிலர்கள் பதில் அளிக்க நேரும். இத்தீர்மானத்தை நான் ஏற்கவில்லை என்பதற்கு, மனு அளித்துள்ளேன். 23வது தீர்மானத்தை ரத்து செய்யவேண்டும்.
அதற்கு பதில் அளிக்காமல், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, தலைவி எழுந்து செல்ல, கூட்டம் முடிந்தது.
மேலும்
-
ராமர் பாலம் வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
இட ஒதுக்கீடு பிரச்னை: ஜராங்கே போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை
-
வானிலை முன் அறிவிப்பு புறக்கணிப்பா: வைஷ்ணோ கோவில் நிர்வாகம் மறுப்பு
-
சென்னையை அடுத்து கோவை, மதுரையில் மின்சார பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை
-
வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்
-
வங்க மொழி மக்களை எதிர்க்க வேண்டாம்; பா-.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல்