மனைவியிடம் பழகிய வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

சேலம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், 42. தறித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி, அருகே வசிக்கும் தங்கராஜ் என்பவருடன் பழகியுள்ளார். இதனால் ரவிக்குமார், மனைவியையும், தங்கராஜையும் கண்டித்துள்ளார்.

ஆனால் தங்கராஜ், தொடர்ந்து பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார், தறித்தொழிலில் ஈடுபட்டிருந்த தங்கராஜை, கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், நேற்று ரவிக்குமாரை கைது செய்தனர்.

Advertisement