பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

மதிகோன்பாளையம், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரியை சேர்ந்த ராமமூர்த்தி, செல்லியம்மாள் தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், செப்., 4 அன்று மூத்த மகன் திருமாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்க செல்லியம்மாள், 47, இளைய மகன் திருமூர்த்தி, 25, அவருக்கு சொந்தமான டி.வி.எஸ்., ரேடான் பைக்கில் நேற்று முன்தினம் மதியம், 2:50 மணிக்கு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, அரூர் தர்மபுரி நெடுஞ்சாலையில் சோலைக்கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்தனர்.

பைக்கை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால், பின்னால் அமர்ந்திருந்த செல்லியம்மாள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், தலையின் பின்பக்கம் பலத்த காயம் அடைந்ததால், 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்லியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, மதிகோன்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement