விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் கோலாகலம்

தர்மபுரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 1,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் அனுமதி பெற்று விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். இச்சிலைகள், மூன்றாம் நாளான நேற்று, ஒகேனக்கல் மற்றும் நாகமரை காவிரியாற்றில் கரைக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று, அதிகாலை முதலே, ஒகேனக்கல் முதலைப்பன்ணை எதிரே சுவாமி சிலைகள் கரைக்கப்பட்டன. பெரிய சிலைகள் கிரேன் இயந்திரம் மூலம் ஆற்றில் கரைக்கப்பட்டன. மாலை, 5:00 மணி வரை, 330 சிலைகளும், நாகமரையில், 70 சிலைகளும் கரைக்கப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன், பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அடாவடி வசூல்


கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் சிலைகளை கரைக்க, திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய, மூன்று மாவட்டங்களிலிருந்தும், 500க்கும் மேற்பட்ட சிலைகளை வாகனங்களில் எடுத்து வந்தனர். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, உதவி கலெக்டர் க்ரிதி காம்னா, தர்மபுரி எஸ்.பி., மகேஷ்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் சிலைகளை கரைக்க வந்த வாகனங்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த சிலர், 200 ரூபாய் வீதம் அடாவடி வசூல் செய்தனர். இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
* அரூரில், 347 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நேற்று, மேளதாளத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, அனுமன் தீர்த்தம், வரட்டாறு தடுப்பணை, வாணியாறு அணை, டி.அம்மாப்பேட்டை, இருமத்துார் தென்பெண்ணையாற்றில் சிலைகளை கரைத்தனர்.
* கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் ஏராளமான சிலைகள் கரைக்கப்பட்டன. டி.எஸ்.பி., முரளி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
* ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதியில், 62 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. நேற்று மேளதாளம் முழங்க, ஊத்தங்கரை பாம்பாறு அணை, அனுமன்தீர்த்தம் தென்பெண்ணையாறு, இருமத்துார் ஆகிய பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு சென்ற கரைத்தனர்.
அணை பூங்கா மூடல்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பூங்காவிற்கு வார
விடுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். நாளை, விநாயகர் சிலைகளை கரைக்க, வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், மக்களின் பாதுகாப்பு கருதி, நாளை (31) அன்று ஒருநாள் மட்டும் அணை பூங்கா மூடப்படு
கிறது என, கிருஷ்ணகிரி டேம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
காட்டுப்பன்றியை வேட்டையாடிய
4 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
அரூர், ஆக. 30
மொரப்பூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்த, 4 பேருக்கு, வனத்துறையினர், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் வனப்பகுதியில், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு காட்டுப்பன்றி இறைச்சியை சிலர் சமைப்பதாக மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி, மொரப்பூர் பிரிவு வனவர் விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் சதீஸ்குமார், டார்வின், பெரியசாமி, சுரேஷ் மற்றும் வனக்காவலர் உதயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர், கீழ்மொரப்பூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த, 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.
அவர்கள் கீழ்மொரப்பூரைச் சேர்ந்த சேகர், 57, அய்யாக்கண்ணு, 64, விஜயகாந்த், 41, எட்டிப்பட்டி சிவராஜ், 55, ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் சேகர் நிலத்தில் மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து, மின்சாரம் பாய்ச்ச பயன்படுத்திய ஒயர், கம்பிகள் மற்றும் காட்டுப்பன்றி இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், நால்வரையும் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன் ஆஜர்படுத்தினர். அவர், சேகர், அய்யாக்கண்ணு, விஜயகாந்த், சிவராஜ் ஆகியோருக்கு தலா, 50,000 ரூபாய் வீதம், மொத்தம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement