விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி அருகே விநாயகர், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, அதிகாலை முதலே விநாயகர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காளியம்மன் பரிவார மூர்த்திகள், கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
இரண்டாம் கால யாக பூஜை செய்து, சிவாச்சாரியார்கள் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை கலசம் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதில், ஓய்வுபெற்ற மக்கள் தொடர்பு அலுவலர் நடேசன் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்திருந்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமர் பாலம் வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்
-
இட ஒதுக்கீடு பிரச்னை: ஜராங்கே போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை
-
வானிலை முன் அறிவிப்பு புறக்கணிப்பா: வைஷ்ணோ கோவில் நிர்வாகம் மறுப்பு
-
சென்னையை அடுத்து கோவை, மதுரையில் மின்சார பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை
-
வெறுப்பு அரசியலை துாண்டும் ராகுல்; மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தல்
-
வங்க மொழி மக்களை எதிர்க்க வேண்டாம்; பா-.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தல்
Advertisement
Advertisement