உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு, 9 முதல், 15 வரையிலான வார்டுகளுக்கு, முருகன் கோவில் மண்டப வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேசன் தலைமையில் நடந்தது. தாசில்தார் சின்னா, பேரூராட்சித் தலைவர் மாரி முன்னிலை வகித்தார்.


செயல் அலுவலர் ரவிக்குமார் வரவேற்றார். பேரூராட்சி மண்டல உதவி இயக்குனர் கணேசன், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். இதில், 15 துறைகளில், 46 வகையான சேவைகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பட்டா மாற்றம், இலவச மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 810 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெயசந்திரன், ரவி முல்லை முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*ஜம்மணஹள்ளி...
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், ஜம்மணஹள்ளி, கோபாலபுரம் ஆகிய பஞ்.,களை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர்.
அதே போல், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் கோரி, பொதுமக்கள் விண்ணப்பம்
அளித்தனர்.

Advertisement