தக்காளி விலை சரிவு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி அதிகம் விளைவிக்ககூடிய பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, பாலக்கோடு மற்றும் தர்மபுரி தக்காளி மார்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்தது.


கடந்த, 23 அன்று தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி, 42 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 32, நேற்று, 27 ரூபாய் என விலை சரிந்து விற்பனையானது.
கடந்த சில வாரங்களில் பெய்த மழையின் காரணமாக, தக்காளி விலை உயரக்கூடும் என, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், சாகுபடி அதிகரித்து விலை சரிவடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement