மின்துறை தனியார்மயத்தை கண்டித்து இண்டியா கூட்டணி தொடர் போராட்டம்; மாஜி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி : புதுச்சேரி மின்துறை தனியார் மயத்தை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். எதிர்க்கட்சி தலைவர் சிவா முன்னிலை வகித்தார்.
கூட்டத்திற்கு பின், முன்னாள் முதல்வர் கூறிய தாவது:
புதுச்சேரி அரசு மின்துறையின் 100 சதவீத பங்குகளை அதானி குழுமத்திற்கு விற்றுள்ளது. குஜராத் அதானி எலக்ட்ரிக்சிட்டி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற கம்பெனி சார்பில், பங்குகளை நிர்வகிக்கும் செபி அமைப்பிற்கு ஒரு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி மின்துறையின் 100 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாகவும், அதன்படி அதானி எலக்ட்ரிக்சிட்டி புதுச்சேரி லிமிடெட் எனும் கம்பெனியை செபியில் பதிய வேண்டி அனுமதி கடிதம் கொடுத்துள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி மின்துறையின் 100 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது தெரியவருகிறது. புதுச்சேரி மின்துறை தனியார் மயத்தை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு, முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மின்துறை தனியார் மயமாக்கப்படாது என, உறுதியளித்தனர்.
இந்நிலையில் அதானி குழுமம் செபி அமைப்பிற்கு கொடுத்த இந்த கடிதத்தின் மூலமாக புதுவை மின்துறையின் 100 சதவீத பங்கை வாங்கியுள்ளது தெரியவருகிறது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டது.
அமைச்சர் நமச்சிவாயம் மின்துறை பங்குகளை விற்கவில்லை. தனியார் மயமாக்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்.
இதனை கண்டித்து, வரும் 8ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடக்கிறது. மேலும், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் வரை இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்' என்றார்.
மேலும்
-
நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
தமிழகத்துக்கு நடந்த துரோகம்; மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது குரில் தீவுகள்; ரிக்டரில் 5.2 அலகாக பதிவு
-
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: 55% பேர் திருப்தி; கருத்துக்கணிப்பில் தகவல்
-
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; ஒரு சிலைக்கு 500 போலீசார் பாதுகாப்பு
-
திருச்செந்துார் கோவிலில் புரோக்கர்கள் வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு