குடிமகன்களால் மக்கள் அச்சம்

இந்திரா சிக்னல் அருகில் சாலையோரத்தில் மது குடிப்பதால், அவ்வழியே செல்லும் மக்கள்அச்சமடைகின்றனர். மாறன், புதுச்சேரி. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இயக்க வேண்டும். பரணி, கோரிமேடு.

பேனர்களால் போக்குவரத்து இடையூறு சோரப்பட்டு, மெயின் ரோட்டில் பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. செல்வம், சேரப்பட்டு. தெரு விளக்கு எரியுமா? மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை சாலையில் உள்ள தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

கண்ணகி, முருங்கப்பாக்கம்.

Advertisement