பா.ஜ., அண்ணாமலைக்கு எதிராக... பேசாதீர்கள்! கட்சியினருக்கு அ.தி.மு.க., பழனிசாமி உத்தரவு

சென்னை: 'தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்' என, அ.தி.மு.க.,வினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். காலை 11:30 மணிக்கு துவங்கி பகல் 1:00 மணி வரை நடந்த கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
60 லட்சம் மக்கள் கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து, மாவட்ட செயலர்கள் கூறியதாவது:
கடந்த 40 நாட்களில், 118 சட்டசபை தொகுதிகளில் பிரசார பயணத்தை முடித்துள்ளேன். இப்பயணத்தில், 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது.
நான் சென்ற 118 தொகுதிகளில், 100ல் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த வெற்றியை பெற்றுத்தர வேண்டியது, மாவட்ட செயலர்களின் பொறுப்பு.
சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. ஏழரை மாதங்களில் தேர்தலே முடிந்து விடும். எனவே, இன்றிலிருந்து மாவட்ட செயலர்களின் ஒரே பணி, தேர்தல் பணியாக மட்டுமே இருக்க வேண்டும்.
துாக்கத்தை பற்றி கூட கவலைப்படாமல், கடுமையாக உழைத்தால் தான், ஆட்சியை பிடிக்க முடியும். தி.மு.க., மீது, மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி, தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்கள் தான், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட போகின்றனர். இதில், ஆளுங்கட்சி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவான ஓட்டுகள் நீக்கப்படாமலும், சம்பந்தமே இல்லாமல் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்படாமலும் தடுக்க வேண்டும்.
பண பலம் இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் ஓட்டுகள் நீக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி பேசியதாக, மாவட்ட செயலர்கள் கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் பேசுகையில், கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தி.மு.க.,வின் பண பலம், த.வெ.க., மாநாட்டில் அ.தி.மு.க.,வை விஜய் விமர்சித்தது பற்றி, தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதில் அளித்த பழனிசாமி, “வலுவான கூட்டணி கண்டிப்பாக உருவாகும்; அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை உடைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு நிர்வாகிகள் யாரும் இடம் கொடுக்கக் கூடாது .
“தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை இப்போது அ.தி.மு.க.,வை
விமர்சிப்பதில்லை; பழனிசாமியே முதல்வர் என்று பேச துவங்கி விட்டார். எனவே, அ.தி.மு.க.,வினர் யாரும் அண்ணாமலைக்கு எதிராக பேசக்கூடாது.
''புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சில விஷயங்களை பேசி இருக்கலாம். அதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. விஜய்க்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டாம்,” என்று தெரிவித்துள்ளார்.
@block_B@
சென்னையில் நேற்று, மறைந்த மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “2026ல் ஆட்சி மாற்றம் வேண்டும் என, அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான முன்னாள் முதல்வர் பழனிசாமி, நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமருவார். புதிய புரட்சி வரட்டும். ஏழைகளுக்கு விடிவெள்ளியாக அரசு செயல்பட வேண்டும்,” என்றார்.block_B










மேலும்
-
பஸ் மீது கார் மோதி விபத்து; மூவர் உயிரிழப்பு
-
நான் அப்படி சொல்லவே இல்லை: சர்ச்சை எம்பி மஹூவா மொய்த்ரா சமாளிப்பு
-
விநாயகர் சிலை கரைப்பில் இரு தரப்பினர் கடும் மோதல்
-
ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல: இப்ராஹிம்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.77,640