பலாக்காய் சொதி

தேவையான பொருட்கள்: பலாக்காய் - ஒன்று தக்காளி - இரண்டு பெரிய வெங்காயம் - மூன்றுபச்சை மிளகாய் - ஆறுபூண்டு பல் - ஆறுதேங்காய் - ஒன்றுமுந்திரிப் பருப்பு - பத்துபொடுக் கடலை - இரண்டு ஸ்பூன் கசகசா - ஒரு ஸ்பூன் சோம்பு - ஒரு ஸ்பூன் சீரகம் - ஒரு ஸ்பூன் கடுகு - அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் கிராம்பு - ஒன்றுஏலக்காய் - இரண்டுபட்டை - ஒன்றுஉப்பு - சிறிதளவுஎண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: பலாக்காயின் மேல் தோலை சீவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனை சிறு துண்டுகளாக நறுக்கி உப்புப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயைத் துருவி வைக்கவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் கீறிப் போட்டு, கசகசா, பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பு ஐந்து, சோம்பு, சீரகம் அனைத்தையும் வதக்கி, அத்துடன் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி மிருதுவாக பொடித்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி, பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும். திரும்பவும் வாணலில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை கொட்டி வதக்கவும், பொன்னிறமாக வெந்ததும் அதில் தட்டி வைத்துள்ள பூண்டை போட்டு வேக வைக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டுக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதிந்து கெட்டியான பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பை நிறுத்தி வாணலை இறக்கவும். இந்த பலாக்காய் சொதியை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். இதேபோல் காலி பிளவர், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து சுவையான குருமா தயார் செய்யலாம்.

Advertisement