மட்டன் இஞ்சி விரவல்

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோஇஞ்சி - ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் (அரைத்தது) பூண்டு - ஒரு டீஸ்பூன் (அரைத்தது)வெங்காயம் - இரண்டு (நறுக்கியது)தக்காளி - இரண்டு (நறுக்கியது)மிளகாய் துாள் - இரண்டு டீஸ்பூன்மஞ்சள் துாள் - அரை டீஸ்பூன்மல்லித்துாள்- ஒரு டீஸ்பூன்சீரகத்துாள் - ஒரு டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுசமையல் எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுபச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:

ஒரு குக்கரில் மட்டன், மஞ்சள் துாள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மட்டன் நன்றாக வேகும் வரை குக்கரில் வேக விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசியும் வரை காத்திருக்கவும்.

இப்பொழுது மிளகாய்த்துாள், மல்லித்துாள், சீரகத்துாள் சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும். வேகவைத்த மட்டன் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மட்டன் கலவை நன்றாக உதிரியாக வரும் வரை வறுக்கவும். வாய்க்கு ருசியான மட்டன் இஞ்சி விரவல் தயாராகிவிடும். இதை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

Advertisement