வெந்தய மசியல்

தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 25 கிராம்துவரம்பருப்பு - 200 கிராம் பச்சை மிளகாய் - தலா இரண்டுகாய்ந்த மிளகாய் - தலா இரண்டுகடுகு - கால் டீஸ்பூன் மஞ்சள்துாள் - கால் டீஸ்பூன்பெருங்காயத்துாள் - கால் டீஸ்பூன்புளி - சிறிய அளவுஎண்ணெய் - இரண்டு டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்துாள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி உப்பு, பெருங்காயத்துாள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இதில், வேகவைத்த வெந்தய பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வெந்தய மசியல் தயார். வெந்தயத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். இதில் நிறைந்திருக்கும் சர்க்கரை எதிர்ப்புப் பண்புகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து, டைப்- 1 சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. கோடை காலத்தில் வெந்தயம் ஊறவைத்து நீரை குடித்து வர உடல்சூடு தணியும்.
மேலும்
-
பஸ் மீது கார் மோதி விபத்து; மூவர் உயிரிழப்பு
-
நான் அப்படி சொல்லவே இல்லை: சர்ச்சை எம்பி மஹூவா மொய்த்ரா சமாளிப்பு
-
விநாயகர் சிலை கரைப்பில் இரு தரப்பினர் கடும் மோதல்
-
ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல: இப்ராஹிம்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவாலாக உள்ளது: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.77,640