விடுதலை முன்னணி பேரவை சிறப்பு கூட்டம்

ஒகேனக்கல், நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மாநில பேரவை சிறப்பு கூட்டம் மற்றும் தர்மபுரி மண்டல செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மத்திய தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரமகேந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி, தற்காலிக போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அன்றே பணபலன்களை வழங்க வேண்டும். பேசி முடிக்கப்பட்ட, 15-வது ஊதிய ஒப்பந்தத்தின் ஒப்புக்கொண்ட படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் மாநில துணைச் செயலாளர் சென்னகிருஷ்ணன் பேசினார்.

Advertisement