களியாம்பூண்டி ஊராட்சி முகாமில் மயங்கிய முதியவருக்கு சிகிச்சை

உத்திரமேரூர்:களியாம்பூண்டி ஊராட்சியில், நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மயங்கி விழுந்த முதியவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

களியாம்பூண்டி கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. களியாம்பூண்டி ஊராட்சி தலைவர் வளர்மதி தலைமை வகித்தார். பரந்துார் விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் சரவணன், மேல்பாக்கம் ஊராட்சி தலைவர் அஞ்சலை முன்னிலை வகித்தனர்.

உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பொதுமக்கள், 800 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது, இளநகர் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன், 60, என்பவர், கோரிக்கை மனு அளிக்க, வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் திடீரென்று மயக்கமடைந்து விழுந்தார். மருத்துவ குழுவினர் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Advertisement