அரசு பள்ளி மாணவர்களுக்கு சந்திர கிரகணம்- விழிப்புணர்வு
நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கெட்டுஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பாக, முழு சந்திர கிரகணம் குறித்த, மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அதில், சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று நேர்க்கோட்டில் இருக்கும் போது, முழு நிலவு நாளில், சந்திர கிரகணம் ஏற்படுகிறது. செப்., 7-, 8 அன்று இரவு சந்திரன், பூமியின் நிழலால், 85 நிமிடங்கள் முழுமையாக மறைக்கப்படும். இதனால், முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இரவு, 9:57 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்கி, 11:01 மணி முதல் அதிகாலை, 12:23 மணி வரை சந்திரன் முழுமையாக மறையும். சூரியனில் இருந்து வரும் குறைந்த அலை நீளமுடைய கதிர்கள் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளம் உடைய சிவப்பு நிறம் மட்டும், அதிகமாக விலகல் அடைந்து, வானத்திலிருந்து முழுமையாக மறைவதற்கு பதிலாக, நிலவானது அடர் சிவப்பு நிறத்தை கொண்டிருக்கும். இதை, 'பிளட் மூன்' என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். இதை நாம் வெறும் கண்களாலோ அல்லது தொலைநோக்கி, பைனாகுலர் மூலமாக காண்பது முற்றிலும் பாதுகாப்பானது என விளக்கம் அளித்தார்.
கிரகணங்கள் வெறும் நிழல்களின் விளையாட்டு என்பதால், அவை மனிதர்கள் விலங்குகள் அல்லது உணவு பொருட்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது, என்ற கருத்துக்கள் எளிய செயல்முறைகள் மூலமாக, பள்ளியின் அறிவியல் மன்ற மாணவ, மாணவியர் வண்ண பொடிகளை கொண்டு, சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றை பள்ளி மைதானத்தில் வரைந்திருந்தனர்.
இதில், தலைமை ஆசிரியர் சுகந்தி உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கோவையில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
-
பேக்கரியில் தீ விபத்து
-
விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க., அரசு
-
மதுரையில் 13 ஆசிரியருக்கு 'மாநில நல்லாசிரியர்' விருது நடைமுறையில் மாற்றம்
-
'எங்கூட தொகுதிக்குள் வராதீங்க'
-
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதி நிலை அறிக்கை தேவை; உயர்நீதிமன்றம் உத்தரவு