'லிப்ட்' கேட்டு பைக்கில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி

வெம்பாக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது, மொபட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி அலங்காரம், 70.

இவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் இருந்தது. ஆக., 24ல் செய்யாறிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து அரசு பஸ்சில் சிறுவஞ்சிப்பட்டு கூட்ரோட்டில் இறங்கினார். பின், கணபதி என்பவரின் மொபட்டில், 'லிப்ட்' கேட்டு ஏறி, வீட்டிற்கு சென்றபோது வழியில், உயர் ரத்த அழுத்தத்தத்தால் மயக்கமடைந்து, மொபட்டிலிருந்து கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த அலங்காரம், 108 அவசர கால ஆம்புலன்ஸ்சில், செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

பிரம்மதேசம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement